பக்கம்:படித்தவள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 173 "நான் கந்தசாமி இவரைத்தான் மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள். எனக்கு இது அதிர்ச்சியைத் தந்தது. "என்னப்பா அஞ்சலை என்ன ஆனாள்:” "இவ்வளவு நேரம் டெல்லி பயணம் ஆகி இருப்பாள்" என்றான். "தாரம் இருக்கும்போது வேறு பேரம் பேசுவது உனக்கு பாரம் அல்லவா?" என்றேன். "அவள் வாழ்க்கையில் எந்தச் சாரமும் இல்லை. குடும்பத்தில் ஒட்டியும் வாழ மறுக்கிறாள். வெட்டியும் போகத் தயங்குகிறாள். அவள் தெரிந்து தவறு செய்துவிட்டு மறைத்துவிட்டு என்னை மணந்து கொண்டாள்" என்றான். "ஆயிரத்தோர் இரவுகள் கதை படித்து இருக்கிறாயா?" என்றேன். "ஒரு பெண் நினைத்தால் தான் விரும்பும் ஒருவனை அடைய முடியும். காவல் எவ்வளவு வைத்தாலும் அவள் ஆவலுக்குத் தடை விதிக்க முடியாது" என்றேன். "அவர்களை அவள் வெட்டி விட்டாள். இதுதானே அந்தக் கதை" என்றான். "இல்லை அவனுக்கு அவளை மணந்தவள் அறிவுரை கூறுகிறாள். தவறு செய்துவிட்டார்கள் என்று அவர்களை ஒதுக்குவது அறியாமை. அது அவர்கள் சொந்த விருப்பு வெறுப்பு ஒட்டியது; அதைத் தடை செய்ய முற்பட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/175&oldid=802491" இலிருந்து மீள்விக்கப்பட்டது