பக்கம்:படித்தவள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ராசீ



பிறை ‘ஷாப்பிங்க்’ கொண்டு சென்ற பையை நிரப்பிக் கொண்டு வந்தாள். அதோடு மற்றொரு கையில் ஒர் உறை” வைத்திருந்தாள்.

“இது என்ன காய்?” என்றேன்; ஏனெனில் அவள் காய்தானே வாங்கிவரச் சென்றாள்.

“அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காய்வாய் நீ
அத்திக்காய் காயாயோ”

என்று பாடினாள். “உனக்குப் புத்தி இருக்கிறதா” என்று கேட்டு விட்டேன். அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பாட்டுப் பாடியதால்.

“அதிகம் இருக்கிறது. தேவைக்குமேல் இருக்கிறது; உங்களுக்குத் தேவைப்படுகிறதா” என்று கேட்டு விட்டாள்.

அவள் சுவைபடப் பேசிச் சுமையைக் குறைத்தாள். அதைத் தெரிந்து கொள்ளாமல் விளையாட்டுக்குச் சொன்னதை விபரீதப்படுத்தி விட்டேன்.

“இது விண்ணப்பப் படிவம்; கடையில் காய்க்கிறது” என்றாள்.

காய்கறிக் கடைக்கு அது வந்து காசுக்கு விற்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

“அரசு விண்ணப்பங்கள் அங்காடிக்கு வந்துவிடுகின்றன. அஞ்சல் செலவு மிச்சம்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/20&oldid=1123432" இலிருந்து மீள்விக்கப்பட்டது