பக்கம்:படித்தவள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ராசீ



“நான் விதி விலக்கு” என்றேன்; அவர் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

“அது எப்படி முடிந்தது?”

“பென்ஷன் வாங்கினேன்; டென்ஷன் போய்விட்டது” என்றேன்.

“டென்ஷனால்தான் நோய் வருகிறது என்று சொல்கிறீர்களா”.

“அதிலே என்ன சந்தேகம்”.

“டென்ஷன் இல்லாமல் வாழ முடியுமா?”

“வாழறதிலே அர்த்தமே இருக்காது. அதுவும் தேவைதான்”.

அவனிடம் மீதி சில்லரை கேட்கவே இல்லை; அவனும் கொடுக்கவே இல்லை. பழக்கம் அது என்று தெரிந்தது.

“என் மகனுக்கு நல்ல இடத்திலே ஒரு பெண் பார்க்க முடியுமா?” என்று கேட்டார்.

“எந்த இடத்திலும் பார்க்க முடியும். உங்களுக்குப் பெண் எப்படி இருக்க வேண்டும். சொந்தம் பந்தம் சொத்து பத்து”.

“படித்தவளாக இருக்க வேண்டும்” என்றார்.

என் அனுபவம் ஒன்றை அவருக்கு எடுத்துக் கூறினேன்.

“ஒரு இன்ஜினியர் இருக்கிறார். அவருக்கு இப்பொழுது வழுக்கைத் தலை ஏற்பட்டு விட்டது; அப்பொழுது இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/32&oldid=1123444" இலிருந்து மீள்விக்கப்பட்டது