பக்கம்:படித்தவள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

33


எதுவுமே கிடைக்கவில்லை; கிடைத்தது கருப்பு: சிவமே என்று எடுத்துக்கொண்டான்” என்றேன்.

“இதில் யார் புத்திசாலி? என்று கேட்டார்.”

“இந்தக் கதைகளைப் படைத்தவர்கள் தான் புத்திசாலி” என்றேன்.

பிறைமதியை அவர் மகனுக்கு சிபாரிசு செய்யலாம் என்று நினைத்தேன்; அவளுக்குப் படிப்பு இருக்கிறது; தெய்வங்களிடம் யாரும் பண்பு இருக்கிறது என்று பேசுவது இல்லை; அது இவளிடத்தில் இருக்கிறது. திருமகள் என்று கூற முடியாது; ஆனால் வீட்டுக்கு அவள் நல்ல மருமகளாக இருப்பாள். அவளை சிபாரிசு செய்வது என்று முடிவு செய்தேன். ஆனால் அவசரப்படவில்லை.

4

பண்ணையார் ‘திண்ணை’ என்றே அவர் வீட்டை நான் அழைப்பது; அந்த வீட்டுக்கு அவர் ‘அறிவுப் பண்ணை’ என்று பெயர் வைத்திருந்தார். அவர் புத்தி சாலித்தனம் கண்டு வியப்பு அடைந்தேன்.

விவசாயப் பண்ணை வைத்தவர் இப்பொழுது வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கிறார். அந்தப் பேச்சு அறிவு தருகிறது என்பது அவர் நம்பிக்கை போலத் தெரிகிறது. அந்த இடத்துக்கு இது தகுதியான பெயர் என்று முடிவு செய்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/35&oldid=1123447" இலிருந்து மீள்விக்கப்பட்டது