பக்கம்:படித்தவள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ராசீ



அவர் தன்னைப்பற்றிய ஒரு செய்தி சொன்னார். அதைக் கேட்பதற்கு முன் என்னைப்பற்றிச் சொல்வதற்கு முந்திக்கொண்டேன்.

நான் என் தாய்க்கு எட்டாவது மகன்; ஆறாவதாகப் பிறந்தால் அவன் யானை கட்டி வாழ்வான் என்று கூறுவார்கள். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை அதற்கு உயிர்இயல் காட்சிச்சாலையில் உத்தியோகம் கிடைத்திருக்க வேண்டும். எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. எட்டாவது பிறந்து விட்டேன்.

எட்டாவது பிறந்தால் மாமன் சாவு தப்பாது என்று சொல்வார்கள். அது உண்மையா பொய்யா என்பது இன்னும் எனக்குத் தெளிவுபடவில்லை. என்னைப் பொறுத்தவரை அது உண்மை என்று தான் நினைக்கிறேன். நான் என் வீட்டுக்கு எட்டாவது மகன்; அது கள்ளம் கபடம் இல்லாத காலம்; வரையறை பற்றிச் செவியறை செய்யாத காலம். என் முன்பிறந்தவர்கள் எல்லாம் மடிவதில் கியூவில் நின்றார்கள். நான் ஒருவன்தான் தேவகி மைந்தனாக நின்றேன். என் தந்தை வசுதேவர் பிறப்பு இறப்புக் கணக்குப் பதிவுகள் செய்வதிலேயே காலம் கழித்தார். அந்த ஆபீசு அவருக்கு அத்துப் படி.

நான் பிறந்த போது என் மாமன் அதாவது தாய் மாமன் என் அம்மாவுடன் பிறந்தவர் அவரைக் கம்சன் என்றே கூறினார்கள். அது அவர் பிறந்த அமிசம்; எங்கள் வமிசம் அப்படி, கல்மிஷம் இல்லாதவர். அந்தக் காலத்தில் மாரடைப்பு என்று இந்தக் கதவு அடைப்பைச் சொல்வது இல்லை; நெஞ்சுவலி என்று சொல்வார்கள், இருந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/36&oldid=1123448" இலிருந்து மீள்விக்கப்பட்டது