பக்கம்:படித்தவள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ராசீ



“ஏன் சார் ஒருத்திகூட நிலைத்து இருக்கமாட்டேன் என்கிறாள்” என்று மனைவியைப் பற்றிய அழுகையைத் தன் தொழுத கையோடு கூறினான்.

“ஏன் ஒரு வேலைக்காரன்கூட நிலைத்து இருக்க மாட்டேன் என்கிறானே” என்று கூறுவது போல் இருந்தது அவன் சொல்வது.

“அவர்கள் என்னோடு தாக்குப் பிடிக்க மாட்டாமல் தூக்குப் போட்டுக்கொண்டார்கள்” என்றான்.

“காரணம் ?”

“பெண்கள் தூக்குப் போட்டுக் கொள்வதற்கு இதுவரை யாரும் காரணம் கண்டுபிடித்ததே இல்லை; இனிமேலும் இதில் யாரும் வெற்றி பெற முடியாது” என்றான்.

“நீ அவளைக் கவனிப்பது இல்லையா?”

“குடித்துவிட்டு வந்து நன்றாகக் கவனிப்பேன். நான் அடித்தால் அழவேண்டுமே. அதைச் செய்ய மாட்டாள். அடி′யா இன்னும் போட்டு உதை என்று அடம்பிடிப்பாள். அதை எப்படி நிராகரிப்பது? என்னால் முடிந்தவரை விளாசுவேன். அதற்குப் பிறகு சங்கீதம் செய்வாள்; அவள் பாட்டைக் கேட்க அக்கம் பக்கத்தவர் வந்து கூடிவிடுவார்கள்.

“அவன் பெண்டாட்டியை அவன் அடிக்கிறான்; உங்களுக்கு என்ன வேலை?” என்று ஒரு பெரிய மனிதர் மைக் இல்லாமல் பேசுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/42&oldid=1123029" இலிருந்து மீள்விக்கப்பட்டது