பக்கம்:படித்தவள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

39



“அவள் கேட்டால் தானே! அவள் அவசரப்படுத்தினாள்; நிதானிக்கலாமே என்றேன்; என் ஆண்மையைச் சந்தேகித்தாள். சாதகம் அப்படிக் கூறுவது உண்மை என்றால் அதனால் பாதகம் இல்லை. நான் நிச்சயம் பேரனைக் காண்பேன்” என்று பேசுகிறாள்.

“பையனையும் அவசரமாகப் பெற்றெடுத்தாள்; இப்பொழுதும் அவசரப்படுத்துகிறாள். பையனுக்கு முதலில் கலியாணம் பண்ணிவையுங்கள்; மருமகள் இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கட்டும். அது போதும். இந்த வீடு கிழடு தட்டிவிட்டது. வரவர இது சந்நியாசி மடமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. காவி வேட்டி ஒன்று வாங்கி அதை இரண்டாகக் கிழித்து உங்களுக்கு ஒன்று; உங்க பையனுக்கு ஒன்று என்று மாட்டிக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு வெள்ளைச் சேலையை மஞ்சளில் நனைத்துக் கொடுங்கள். அரே கிருஷ்ணா இயக்கத்துக்கு நான் தலைமை வகிக்கிறேன். இதனைப் பஜனை மடம் ஆக்குகிறேன் என்று கூறுகிறாள்” என்றார்.

5

ஜோசியரை நோக்கி ஒரு ஒசி கிராக்கி வந்து சேர்ந்தது. அவர் ஏழை என்றும் பணக்காரன் என்றும் இந்த வகையில் வேறுபாடு காட்டுவது இல்லை. தன்னை மதித்து வருகிறான் என்பதைவிடத் தன் ஜோசியத்தில் அவன் நம்பிக்கை காட்டுகிறானே என்பதால் அவனைப் பெரிதும் வரவேற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/41&oldid=1123453" இலிருந்து மீள்விக்கப்பட்டது