பக்கம்:படித்தவள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
ராசீ
 

இல்லையோ எம் தோழர்களைச் சந்திக்காமல், இருக்க மாட்டோம். எங்கள் அவலங்களைப் பரிமாறிக் கொள்வோம்.

“எங்கெங்கே போட்டீர்கள்? எங்கெங்கே இருந்து அழைப்பு இதழ்கள் வந்தன?” என்று விசாரிக்காமல் இருக்க மாட்டோம்.

“சில கவி அரங்குகளில் பட்டி மன்றங்களில் வருகிறவர்களே வந்து அறுப்பதைப் பார்த்திருப்பீர்கள்; அதைப் போன்று வந்தவர்களையே பார்த்து அலுத்துவிடுவோம். சில முகங்கள் மறைமுகங்கள் ஆகிவிடுவதும் உண்டு; பெண்கள் தொடர்ந்து வரமாட்டார்கள். அவர்கள் கதை முடிந்து கதையாகி விடுவது உண்டு. அவர்கள் விலை போய் இருப்பார்கள் என்று முடிவு செய்து கொள்வோம்.

அவர்களும் மறக்காமல் மண இதழை அனுப்புவார்கள்; அதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிக் கொண்டிருப்போம். ஜனத்தொகை குறைந்தது என்று மகிழ்ச்சி அடைகிறோம்; புரியவில்லையா? இன்டெர்வியூவுக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை குறைந்தது என்று ஆறுதல் அடைவோம்.”

“முத்து உனக்குத் தெரியுமா?”

“அவர் எழுதின கடிதம் தான் இது.”

“உங்களுக்குள் அஞ்சல் வழிக் கல்வி உண்டா?” என்று கேட்டேன்.

“சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் அவசியம் குறித்து அடிக்கடி எழுதுவார். இளைஞர்களுக்கு இது தவிர வேறு வழி இல்லை” என்று அடிக்கடி கூறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/52&oldid=1139514" இருந்து மீள்விக்கப்பட்டது