பக்கம்:படித்தவள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

53


தாரத்துக்கும் வித்தியாசம் இருந்தது; பேதமற்ற சமுதாயம் உருவாகிவிட்டது.

கணவன் அவனுக்கு நாங்கள் உடைமையாக இருந்தோம்; ‘என் மனைவி’ என்று சொல்லி அவன் தன்னோடு இணைத்துக் கொண்டிருந்தான்; இன்று ‘எனக்கு மனைவி’ என்று தான் சொல்ல முடிகிறது.

இன்று பாசத்தை விட மதிப்பும் மரியாதையும் மலிந்து விட்டன. இது தேய்வா வளர்ச்சியா என்று கூற இயல் வில்லை” என்று தொடர்ந்து பேசினாள்.

“எனக்கு ஒரு சின்ன ஆசை உண்டு. என் கணவன் நன்றாகக் குடித்து விட்டு வரவேண்டும். அந்த மயக்கத்தோடு என்னைத் தேடி நயக்க வேண்டும். கோபம் வந்து என்னை அடித்துப் புரட்டவேண்டும். இந்த ஆசை படித்தவள் எனக்கு நிறைவேறுமா?” .

“உன்னைத் தொடலாமா?” என்று அனுமதி கேட்கும் மதிநிறைந்த நன்னாள் ஆகிவிட்டது. இழுத்துப் போட்டு அடித்து நொறுக்கும் அழகினைப் படித்த பெண் இழந்து விட்டாள்.

‘உடைமை’ என்று கொள்ளும் அதில் உள்ள இறுக்கம் உரிமையில் இருப்பது இல்லை. எங்கள் உடைமைப் பார்வையிலும் அவர்கள் அவதிப்படமாட்டார்கள் என்பதை மறுக்கவில்லை. ‘சந்தேகம்’ என்பது எங்கள் மேல் வைத்த பாசத்தால் தான் ஏற்படுகிறது. அவர்கள் புனிதத்தில் நாங்கள் பெருமைப்படுகிறோம். பிறன் மனை நோக்காத பேராண்மை தன் கணவனுக்கு இருக்கிறது என்றால் பெண் பூரித்துப் போகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/55&oldid=1139517" இலிருந்து மீள்விக்கப்பட்டது