பக்கம்:படித்தவள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்தவள்

73



அவன் வேறு வழி இல்லாமல் அவளை வழிக்குக் கொண்டுவரத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கே பிரிந்தவர்கள் கூடினார்கள். அவர்கள் சும்மா இருக்க முடியுமா! தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள் என்று கேள்வி. இந்தச் செய்தி அங்குப் பேசப்பட்டது.

12

பிறை எனக்கு நல்ல செய்தி சொல்கிறாள் வேலை கிடைத்து விட்டது என்று.

“எதுவும் உடனே கிடைக்காது. இப்படித்தான் இதுவும்” என்று என் வாழ்த்தைக் கூறினேன்.

தரகர்கள் அவர் வீட்டு காஃபிக்கு வந்து கொண்டிருந்தனர். மீனாட்சிக்கு எப்பொழுது திருமணம் என்று பாண்டி நாட்டார் கேட்டுக்கொண்டிருந்தனர் ‘படித்தவள்; சம்பாதிக்கிறாள்’ என்று அவளைப் பற்றிப் பேச்சுப் பரவியது.

அவள் அடுத்த கட்டம் மணம்; என் பையன் அவளோடு பழகியவன்; அதனால் அவள் மீது நேசம் வைத்திருந்தான்; பாசம் வைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தான்; அம்மாவுக்கு எழுதி இருந்தான்.

‘எதிர் வீட்டுக் கதிர் ஒளியை எனக்குப் பேசி முடி’ என்று எழுதி இருந்தான். ராதாவின் போக்கில் ஒரு தெளிவு ஏற்பட்டது; பாதை புலப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/75&oldid=1283807" இலிருந்து மீள்விக்கப்பட்டது