பக்கம்:படித்தவள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவள் சொல்வது சோகம் பாடும் சோஷலிசக் கவிஞர்களின் கவிதையை ஒத்திருந்தது என்று கூறப்படுகிறது.

- 16 -

முத்து அவனுக்குப் பிறை காதல் முறிவை ஏற்படுத்தி அவனை வெளிநாட்டுக்குப் போகச் செய்கிறாள். அவள் கூர்த்த மதி இதனைச் செய்து முடிக்கிறது. அவள் உண்மையில் ‘பிறைமதி’ என்பதைக் காட்டிவிடுகிறாள்.

“என் பெற்றோர்களை விட்டுச் சொல்கிறேன். அவர்களைக் கவனித்துக் கொள்” என்கிறான் முத்து.

“அவர்கள் என் பாதுகாப்பில் இருப்பார்கள்; என் தாயும் உன் பெற்றோர்களும் என் கண்கள்” என்கிறாள் பிறைமதி.

“மூன்று ஆண்டுகள் காத்திருப்பேன்” என்று கூறி விடை தந்து அனுப்புகிறாள்.

படித்தவள் இவளைப் பற்றிய சொற்சித்திரம் இந்த முதற் கதை.

2. களைகள்

இதில் கதைசொல்பவர் ஓர் இளைஞர் முதியவர் அல்ல.

கதை அறிமுகம் ஆகிறது; ‘கம்மினாட்டி’ என்ற சொல்லுக்கு விளக்கம் கேட்கப்படுகிறது. இது வினா? விடை காண முடியவில்லை. நகைச்சுவையோடுகதை தொடக்கம் பெறுகிறது.

மற்றொரு வினா அவனுக்கு வாழ்க்கையில் ஏற்படுகிறது.

‘அன்னாரகினா’ நாவலைப் படிக்கிறான். அதில் அவள் ரயில் என்ஜின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

கதாசிரியர் சந்திக்கும் மற்றொரு பாத்திரம் மனைவியை அவள் தவறுக்காகக் கழுத்து அறுத்துவிட்டுச் சிறை செல்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/8&oldid=1123420" இலிருந்து மீள்விக்கப்பட்டது