பக்கம்:பட்டத்தரசி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



ஆதலால், பறக்கும் ஆறுகால் வண்டே!
உன்னிடம் ஒன்று கேட்க நினைக்கிறேன்.
எனது தலைவியின் இளங்கூந்தல் போல,
மணத்தை வழங்கும் மதுமலர் உண்டோ?
பாட்டை நிறுத்திப் பதில்சொல் வண்டே!



எனது உள்ளம் இனிப்பதற் காகவோ,
இவ்வூ ரினன்யான் என்பதற் காகவோ,
உளத்தில் உள்ளதை, உதட்டால் மாற்றாது:
உண்மை உரைத்திடு, கண்-மை வண்டே'
என்று அந்த, இளைஞன் கேட்கிறான்.


சங்கப் புலவர் தந்துள்ள நூற்களுள்,
குறுத்தொகை என்பதும் ஒன்று; சற்றுமுன்
மேலே கூறிய கருத்தினை விளக்கும்
பாட்டு, அந்த ஏட்டில்ஒன் றுள்ளது.
அந்தப் பாட்டு, அடியில் வருமாறு:


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி,
காமம் செப்பாது கண்டது மொழிமோ,
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்'
செறியெயிற்று அறிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே


இதனைஇயற் றியவர் இறையனார் ஆவர்.


தலைவன் ஒருவன், தனது தலைவியின்
மழைக்குழல் வழங்கும் மணத்தைக் குறித்து,
மலர்மீது படியும் வண்டி னிடத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/10&oldid=1484999" இலிருந்து மீள்விக்கப்பட்டது