பக்கம்:பட்டத்தரசி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

பருவ மடைந்த நிருவான மலரின் வாயைச் சுவைத்தும்: மதுவுண்டு மயங்கியும்;

பாட்டுப் பாடிப் பறந்துதிரி சின்றது!

வாலிபன் அந்த வண்டினை நோக்கி; அந்தி மலர்களைச் சந்திக்கும் வண்டே பறக்கும் நாவற் பழமே 'நாங்கள், மலரைத் தொடுக்கும் மாவிடர் நீயோ, மலரில் படுத்து மன்மதச் சுவைபெறும் மரகதச் சோலேயின் மருமகப் பிள்ளே!

கத்துக் கறுப்பே வெண்மையின் எதிர்ப்பே அசைந்து நடக்கையில், அன்னம் போலவும்: எழுந்து நீற்கையில், இளங்கொடி போலவும்: படுக்கையில் ஒவியம் பரிவை போலவும்: காட்சி தந்திடும் காமச் சித்திரம்!

ஒருவிழி யால்என் உடல்தகனச் சுடுவாள். மறுவிழி யாலே, மருந்து போடுவாள் அவளோ, அனப்பவள்; சுவைப்பவள்; ஆடை அவிழ்ப்பவள்; உடலைப் பொருத்தும் நட்பினை உடையவள்.

பூவின் பொடியையும், பொங்குசெந் தேனையும், அன்ருடம் நன்கு ஆராய்ச்சி செய்கிருய், அதல்ை, மலர்களின் ஆராய்ச்சி தன்னில், உனக்குமேல் அனுபவம் ஒருவர்க்கு மிராது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/9&oldid=662062" இலிருந்து மீள்விக்கப்பட்டது