பக்கம்:பட்டத்தரசி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f()

வஞ்சிப்பா சூத்திர வருணமா யிற்து!

அந்த முறையில், இந்தக் குறுந்தொகைப் பாடலும் ஒருவனுல் புராணமா யிற்று! பிழைப்பைக் கருதி, பிழைபுரிந்து விட்டான், ஆரியத் தமிழன், அறிவு இருண்டவன்.

அகச்சுவை எண்ணம் அளிக்கும்.இப் பாடலைப் புராண மாக்குமுன் இந்தப் புலவன், மதுரையை நினைக்கிறான்; பாண்டியன் மூளைத்ததும், பாண்டியன் முளைத்ததும், சங்கம் வருகின்றது! சங்கம் வந்ததும், பின்னர் நக்கீரச் சிங்கம் வருகிறான்; திரும்பவும் நினைக்கிறான். தருமி என்னும் தரித்திரப் பார்ப்பன, இளைஞனைக் கதையில் இனைத்து வைக்கிறான்.

இயற்கையில் கூந்தலுக் கில்லை வாசம் மங்கையர் குழலுக்கு மாமணம் உண்டுவாதிப் பிரதி வாதி போல, இரண்டு பிளவுகள் - நேரெதிர் நினைவுகள்! இந்த எண்ணங்களை இழுத்துச் சேர்க்கிறான்.

கற்கண்டுப் பாடலை இயற்றிய கவிஞர் இறையனார் தன்னை, இறைவனுக்கு கின்றான்.

சக்ர வர்த்தித் திருமகன் இராமனை, வான்மீகி, ஆண்டவன் ஆக்க வில்லை. கம்பனே, இராமனைக் கடவுளாக்கினான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/12&oldid=1508201" இலிருந்து மீள்விக்கப்பட்டது