பக்கம்:பட்டத்தரசி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

நீரிலே அந்தக்-கீரனை நிறுத்தி, கோயில் மனிதனைக் கும்பிட வைத்து, கோபப் பிரசாத மெனும்பிர பந்தம் பாட வைக்கிறான் பண்டிதப் புலவன்!

எவ்வளவு மாற்றம்! எவ்வளவு புளுகு '!

குறுந்தொகைப் பாடல், திருவிளை யாடலாய் ஆகும் போது; அந்தச் செய்யுள், பட்டத் தரசி ஆனால் என்ன ?

கலைஞர் கருணா நிதியார் நடத்தும், முரசொலி இதழில் முன்பே, ஒருமுறை வந்து உள்ளது, இந்தக் கவிதை

எனது கவிதைகள் இவ்வளவு துரம் பரவுவ தற்குப் பழைய நண்பர், கருணா நீதியே காரணமாவார். அவருக்கு எனது ஆயிரம் நன்றி !

பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி மிகுந்த ஜமாலியா அச்சக் அதிபர் ஜமாலுத்தீன், அழகொடு இதனை நன்கு அச்சிட்டு தந்துளார். அவர்க்கு என்றும்என் நன்றி

சத்து நூல்தரும் முத்து நூலகம், இச்சிறு கவிதையை அச்சில் அழுத்தி, நுலாக்கி யுள்ளது, நன்றி அதற்கே!

சென்னை சுரதா 15-7.56 )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/17&oldid=1508217" இலிருந்து மீள்விக்கப்பட்டது