பக்கம்:பட்டத்தரசி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பொருட்குற்றம் உடையது பாடல் என்கிறான். நாவில் வல்ல நற்றமிழ்க் கீரன்.

இந்தநக் கீரனுக் கின்னும் சரியாய் இலக்கண விளக்கம் ஏற்பட வில்லை.

ஆதலால், இவனுக்கு அகத்தியனைக் கொண்டு பொருளிலக் கணத்தைப் போதனை செய்யச் சொல்ல வேண்டும் என்று, சொல்கிறான்; பார்வதி மாதிடம், பஞ்சாங்கக் கடவுள்!

மறுத்து வாதிட வல்லமை இருந்திடில்’ இல்லை, இல்லை! இதுதான் உண்மை! என்று நிலைநாட்டி இருத்தல் வேண்டாமா ? தாஆனாட்டித் தனது நிறுப்பே. எனசூத் திரப்படி, இந்த முண்டம்?

பொருளி லக்கணம் புரியதாம் அவனுக்கு: சுருக்கவிழ்ந்த குடுமிச் சொக்க நாதன் அளக்கிறான் ஆரியப் பார்வதி இடத்தில்

பெரியார் அவர்கட்கு, அறிவோ ஆற்றலோ, இல்லை என்று இயம்புதல் போலவும்: அறிஞர் அண்ணா அவர்கட்குப் பேசத் தெரியாது என்று தெரிவித்தல் போலவும்: கொடுவாள் தன்னை எடடா" என்று பாடிய புரட்சிக் கவிஞர்க்குக் கவிதை எழுதத் தெரியாது என்பது போலவும் : இருக்கின்ற தான்ருே இவன்வாய்ச் சொற்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/16&oldid=1508216" இலிருந்து மீள்விக்கப்பட்டது