பக்கம்:பட்டத்தரசி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

நேரடி உனக்கு நன்மை செய்கிறேன். கொஞ்ச நேரம் பொறுஎன்று கூறி......

நீல வனத்து நிலவின் வடிவையும். கொம்பைத் தழுவும் கொடியின் வளைவையும், புல்நடுக்கத்தையும், பூவின்மென்மையையும்: செங்கதிர் ஒளியையும், பனிநீர்த்துளியையும்; காற்றின் சஞ்சலத் தன்மை கன்னையும்; முயலின் கூச்சத்தையும், மயிலின் செருக்கையும்: கூவுங் குயிலின் குரலையும்; இவற்றோடு, வைரக் கல்லின் உறுதி-மலர்தரும் தேனின் இனிமை-தீயின் வெப்பம் மானின் மருட்தி இவற்றையும் சேர்த்து,

பெண் உரு என்று படைத்து, ஈசன்: இந்த மணமகள், இவளை மாலை இட்டு 'ஆரிய இல்லறம் நடத்துக, என்று ஏன் உதவி இருத்தல் கூடாது: எல்லாம் செய்ய வல்ல சித்தர்க்கு இது ஒரு பெரிதா பக்தி மான்களே?

யானையின் தலைபோல் அமைந்த சங்கை, கீர்கீர் என்னும் கீரனே என்கிறான்; வாதம் புரிந்திட வந்த இறைவன்.

சங்கு அறுத்துப் பிழைப்ப தெம்குலம், சங்கர னார்க்கு ஏதப்பா குலம்? என்று நக்கீரன் எதிர்த்துக் கேட்கிறான்; அஞ்சாத வீரத் தமிழன் ஆதலால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/15&oldid=1508215" இலிருந்து மீள்விக்கப்பட்டது