பக்கம்:பட்டத்தரசி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தந்தையும் பெற்ற தாயும் இல்லாத, தரித்திரப் பார்ப்பான் தருமி என்பவன் மதுரைச் சோம சுந்தர விடத்தில், இனிக்கும் திருமணம் இன்றி தவிக்கிறேன் பரிசுச் செய்யுள் பாடித் தருவீர்என்று கேட்கிறான், ஆலயம் வந்து!

கேட்பவன் ஆரியன்! தமிழன் அல்லன்!

அருள்புரி கின்றான் நெற்றிக்கண் ஆண்டவன்.

பார்ப்பனன் கேட்க, பார்ப்பன பகவான், ஏதும் கூறாது எழுதித் தருகிறான். இங்கே "அவனின்" இனத்தின் உணர்ச்சி இலைமறை காயென இருக்கின்ற தல்லவா?

மதுரைச் சொக்க நாதன் என்பவன் அந்நாள் ஆரியர்க்கு ஆச்சாரி யாக இருந்து இருப்பான் என்று நினைக்கிறேன். இல்லையேல், மதுரை இறைவன் தருமிக்கு இவ்வளவு பரிவு ஏன் காட்ட வேண்டும்?

பாடலைத் தந்த பார்வதிக் கணவன்; பரிசு பெற்றிடப் பாடலும், நீயோர் அணங்கை மணந்திட ஆயிரம் பொன்னும், வேண்டுவ தெல்லாம்வேண்டாம்'அம்பி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/14&oldid=1508209" இலிருந்து மீள்விக்கப்பட்டது