பக்கம்:பட்டத்தரசி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டத் தர சி

சோலையில் ஒர்நாள

கூடுகட்டத் தெரியாத குயிலின் கூட்டம் கூவுகின்ற சோலைதனில் உலவிக் கொண்டே, பாடுவதும், ஆங்குள்ள அழகை, உற்றுப் பார்ப்பதுவு மாயிருந்தான் பாண்டி வேந்தன் காடுபடு திரவியங்கள் ஐந்துள் ஒன்றைக் கண்டெடுத்தேன் பாருங்கள்-என்று கூறி, ஆடுமயில் இறகுதனைக் காட்டிக்கொண்டே அவனருகில் பட்டத்து அரசி வந்தாள்! -

சிங்கத்து ஆசனத்தில் செங்கோல் ஏந்தி, தேசத்தை அரசாள்வோன்; அவளை நோக்கி செங்கரும்பு போல்உனது அங்க மெங்கும் தித்திப்பு வைத்திருக்கும் பெண்ணே! மாதர் சங்குநிறப் புன்னகையைக் கண்டால், கொம்பைத் தழுவும்வெண் முல்லைகளும், மலரும் என்பர். மங்கையர்கள், மாமரத்தைக் கூர்ந்து பார்த்தால், மாமரமே பூத்திடுமாம், மெய்யா ? பொய்யா ?

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/19&oldid=1508219" இலிருந்து மீள்விக்கப்பட்டது