பக்கம்:பட்டத்தரசி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டத்தரசி

எங்கேநீமரத்தைப்பார்; உன்னேக் கொஞ்ச எதிர்பார்க்கும் என்னைப்பார்-என்று கூறி, தங்ககிற அங்கத்தைத் தொட்டான், தொட்ட தமிழரசன் உதடுதனே உதட்டால் தொட்டாள்! தொங்குகின்ற கூந்தல்தனை எடுத்து, வேந்தன் தோள்மீது விட்டெறிந்தாள்; பிடித்தான் மன்னன். சிங்காரப் பூங்குழலில் பிறந்த வாசம் - சிந்தனையில் ஆழ்த்திற்று, மெளன மானான்!

தென்றலினுல் மேலாடை நழுவ, அந்தத் தேர்வேந்தன் கரம் பட்டு முழுதும் நீங்க, இன்பத்தின் முதற்கட்டம் முடித்து கின்ற, ஈரநிலா வதனத்தாள், அவனே நோக்கி; பொன்மலேயே! நான் தழுவும் சிலேயே ஏனோ பூரிக்கும் போதிந்த மெளனம்?-என்றாள். இன்னமுதே மங்கையரின் கூந்த லுக்கு, இயற்கையிலே மணம் உண்டா?-என்று கேட்டான்.

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/20&oldid=1508225" இலிருந்து மீள்விக்கப்பட்டது