பக்கம்:பட்டத்தரசி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா

அரசாள்வோன் முன்னமர்ந்தான் பின்ன மர்ந்தார் ஆங்குள்ளோர், ஆசனத்தில் மன்னன் அந்த, பெரும்புலவன் தமிழ்ச்சங்கத் தலைவன்; வெல்லும் பேச்சறிந்த நக்கீரன் தன்னை நோக்க வரிவேங்கைப் புலிமன்னன் குறிப்ப றிந்து, வாடாத பேரறிஞன் சபையைப் நோக்கி, தரைமெச்சும் புலவர்களே!-என்ருன் கிரன். தமிழ்மெச்சும் புலவரெலாம் அவனேப் பார்த்தார்.

கடவுளுக்கு நம்மைப்போல் உருவம் உண்டா? கண்ணுக்கா மனத்திற்கா? காட்சி இன்பம்? உடையாத கண்ணுடி, நெய்யா ஆடை, உலகிலுண்டா? பறப்பதெது? இறகா? காலா? படைப்பு எது?” எனகம்மை நேற்றுக் கேட்ட பார்த்திபர்க்கு, இப்போதோர் பெருஞ் சங்தேகம்; இடைதுவ ஞம் ஏந்திழையார் கூந்த லுக்கு, இயற்கையிலே மனமுண்டா? இதுதான் கேள்வி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/29&oldid=662107" இலிருந்து மீள்விக்கப்பட்டது