பக்கம்:பட்டத்தரசி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றந்த நக்கீரன் திருப்பிக் கேட்டான்.
எதிர்நின்ற பூணூலன் சமை யானான்;
மன்றத்தில்; பேசாமல் தருமி தோற்றான்.
வாதிட்டுப் பரமசிவன் தெருவில் தோற்றான். வென்றதங்கே நக்கீரன் நாக்கு; தோற்ற
வேதியனின் கால்அங்கே எடுத்த தோட்டம், ஒன்றுபட்டுக் கைகொட்டிச் சிரித்தார்! பார்ப்பான் ஒட்டிவந்த பொய்மீசை வீழ்ந்த தாங்கே!

தமிழ்ரெலாம் வீரத்தை விளக்கிக் காட்டத்
தன்முகத்தில் சுயமீசை வைத்துக் கொள்வர். இமயமலை அடிவாரம் விட்டு வங்தோர்
ஏய்ப்பதற்கு, வேரில்லா மீசை வைப்பர்.
அமுதாங்கப் பாண்டியர்க்கு மீசை உண்டே,
அதுபோல, ராமனுக்கு உண்டா மீசை?
சமுதாயந் தனைக்கெடுக்கும் பார்ப்பான், மீசைத் தந்திரத்தைப் பார்த்திரா?. என்றான் கீரன்.

வெற்றிதனை மட்டுந்தான் இவ்விடத்தில்
விட்டுவிட்டுச் சென்றுள்ளான் என்றிருந்தேன்; மற்றிங்கே பார்த்தீரா? உம்மி டத்தில்,
வாதமிட்டு ஓடியவன் மீசை- என்று,
கற்றறிருந்த கீரனிடம் ஒருவன் வந்து,
காட்டலுற்றான் அந்தப்பொய் மீசை தன்னே,
சுற்றிநின்றோர் அதைக்கண்டு சிரித்தார், அந்தத்
தூயதமிழ்ப் பெருங்கவியும் சிரித்துக் கொண்டான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/50&oldid=1518508" இலிருந்து மீள்விக்கப்பட்டது