பக்கம்:பட்டத்தரசி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூந்தலுக்கு இயற்கைமணம் கிடையா தென்று கூறியதை மறுக்கின்றேன்; கரிய வண்டு,
மாந்தளிரை ஓலைதனைத் தொடுவ தில்லை,
மணம்வீசும் பொருள்மீதே வண்டு மொய்க்கும்.
ஈந்துதரும் இலைபோல, மணமில் லாது
எழில்மாதர் கருங்கூந்தல் இருக்கு மானல்,
பூந்தாது உண்டுஉயிர் வாழும் வண்டு,
பூங்குழலில் மொய்ப்பானேன்?.என்று கேட்டான்,

எழில்மலரால், இளந்தென்றல் மணக்கும் அன்றி இயற்கையிலே காற்றுக்கு வாசம் இல்லை.
மழைப்பருவ மேகத்தைப் போலி ருக்கும்
மங்கையரின் இளங்கூந்தல்; மலரின் கூட்டம் வழங்குகின்ற வாசனையைப் பெறுவ தின்றி,
மற்தற்குச் சுயமாக வாசம் இல்லை.
சழக்குடையோய்! சர்க்கரையின் சேர்க்கை யின்றித்
தானாகக் குடிதண்ணீர் இனிப்ப துண்டோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/49&oldid=1518501" இலிருந்து மீள்விக்கப்பட்டது