பக்கம்:பட்டத்தரசி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறந்துபட்டும் இறவாத மூதன், ஏட்டில்
எழுதிவைத்த கடைசிப்பாட்டிதுதான். இன்று; துறவியையும் அழவைத்து விட்ட தன்றோ
தூயதமிழ்ப் பெரியாரின் மரணம்---என்று,
மறுவில்லா நக்கீரன் ஓர்கூட் டத்தில்
மனங்கலங்கிப் பேசிக்கொண் டிருந்த போது,
வறுமையுள்ள புலவனைப் போல் வேடமிட்டு
வந்திட்டான் பரமசிவன் விரைந்து ஆங்கே!

தெக்கணத்துப் பேரறிரன் கீரன் தன்னைச்
சிவன்கோவில் சிலைகழுவும் பார்ப்பான் பார்த்து,
நக்கீரன் நீர்தானோ?- என்றான். அந்த
நற்புலவன், நான்தான்காண் கீரன்-என்றான்.
இக்கணமே, கூந்தலுக்கு இயற்கை வாசம்
இல்லைஎன்ற வாதத்தைத் தொடங்கும்-என்றான். மக்களங்கே, பேசாத பதுமை யானார்,
வந்தவனோ மறுபடியும் தொடர்ந்தான் பேச்சை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/48&oldid=1518495" இலிருந்து மீள்விக்கப்பட்டது