பக்கம்:பட்டத்தரசி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தானியங்கள் முளைக்காமல் போவ தில்லை! தனித்திறமைப் புதுமைகளும் சாவ தில்லை!
ஆனதினால், அவர்தந்த புதுமை நூற்கள்:
அத்தனையும் உயிர்வாழும்; அந்த நூற்கள்;
சீனத்திற் சென்றாலும், புவியின், மற்ற
தேசத்திற் சென்றாலும், அங்கு உள்ளோர்,
யானைதந்த தந்தமிது என்பர் அன்றி,
யாருமதைப்-பன்றியின்பல்-என்று கூறார்.


காவியத்தால் நாட்டுக்கு நன்மை செய்யக்
கருதிடுவோர், ஈசலைப்போல், அற்ப நாளில்
ஆவியற்றுப் போகின்ற நூற்கள். நூறு
அளிப்பதனாற் பயனில்லை! பெருமை இல்லை. பூவுலகோர் சிந்தித்து மதிக்கத் தக்கப்
புதுஎண்ணம்-வாடாத திறமை-சேர்த்துச்
சாவதற்குள் குறையில்லாப் பெருநூல் ஒன்று தந்திட்டால், புகழ்கிலக்க அதுவே போதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/47&oldid=1518488" இலிருந்து மீள்விக்கப்பட்டது