பக்கம்:பட்டத்தரசி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூத்தாடி மீசை

காற்றுதனில் தென்றல்போல் வீரர் ஏந்தும்
கருவிதனில் கூர்வாள்போல்; உறுப்பில்கண்போல்,
ஆற்றலிலும் அறிவினிலும் சிறப்பு வாய்ந்த
அதிமூதன் நமைவிட்டுப் பிரிந்து விட்டார்.
நேற்றிருந்தார் நம்மோடு; இன்றுவெந்து
நீரானார் இடுகாட்டில்; அவருக் காகப்
பாற்றெளித்துப் பயனில்லை; அவரைப் போலப்
பைந்தமிழ்க்குப் பெருந்தொண்டு புரிதல் வேண்டும்.

வீட்டுக்கு நிதிசேர்த்துக் கொடுப்பர், வைர
விழாநடக்கும்; பொன்னாடை பெறலாம்; என்று,
நாட்டுக்கு அவர்தொண்டு செய்ய வில்லை.
நற்றமிழ்க்கு வியாபாரி ஆக வில்லை;
ஆட்டுவித்தால் ஆடுகின்ற அடிமை; கோழை;
அவர்போன்றோர் முதுகெலும்பு நிமிர்வ தற்குப்
பாட்டெழுதிக் காட்டியவர்; இலக்கி யத்தில்,
பகுத்தறிவைப் புகுத்தியவர்; கர்ம வீரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/46&oldid=1518098" இலிருந்து மீள்விக்கப்பட்டது