பக்கம்:பட்டத்தரசி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

......வாசல்

கொடுத்துச் சிவந்த குமணன் கைபோல மேற்குவான் சிவந்து விளங்கு கின்றது. பொன்செய் கொல்லர் பொழுதுநிலை அறிந்து,

அடிக்கும் கருவியை ஒடுக்கு கின்றனர்.

ஓலைக் கணக்கரின் வேலைநிற் கின்றது.

சந்தனப் பொதிதை தனைவிட் டெழுந்து தென்றல், சோலையைத் தேடிவரு கின்றது. எதிர்பார்த் திருந்த மதுமலர்க் கூட்டம்,

வந்த காற்றுக்கு, மனந்தரு கின்றது.

குருத்து நிலவே! கொல்லிப் பாவையே! கண்ணே! மணியே! கனியே! சுவையே ! பூவிற் சிறந்த தாமரைப் பூவே! பாவிற் சிறந்தநே ரிசைவெண் பாவே!

என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்தும்; கட்டித் தழுவியும்; கனிஇதழ் ஊன்றியும், தொட்டும் சுவைத்தும்; தோள்தவில் சாய்ந்தும், ஒருவர் நிழலில் ஒருவர் ஒதுங்கி, இருவரெனும் தோற்றம் இன்றி இருந்து: இனிமைத் தனிமையில் தினந்தினம் மகிழும் காதலர் இருவர் கனிமொழி பேசி, வரிநிழல் வழங்கும் சோலைவரு கின்றனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/7&oldid=1485095" இலிருந்து மீள்விக்கப்பட்டது