பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 126 4. பட்டினத்தடிகள் ஆகவே, அவரை மூன்றாம் பட்டினத்தார்’ என்று பெயர் சொல்லுவதும் பிழையாகிறது; பொருந்துவது மாகும். இவருக்கு நாம் வைக்கும் பெயர் மூன்றாம் பட்டினத்தார்: இவை தவிர, சித்தர் கோவையில் பட்டினத்தார் ஞானம் 100 என்று முதல் நூறு வெண்பாக்கள் அந்தாதித் தொடையாக உள்ளன. காப்பாக வருவது முருகன் பாட்டு. அடுத்தது 'நெஞ்சொடு புலம்பல் என்பதைப் பெயர் சுட்டிக் குறிப்பிடுகின்றது. நூல் முழுதும் சித்தாந் தக் கருத்துகள் அடங்கியவை. இவை இரண்டாம் பட்டி னத்தாரின் வாக்கு என்று துணிந்து சொல்ல இயல வில்லை. நெஞ்சில் பசுமரத்தானிபோல் பதியும்டி நேர் முகமாகக் கருத்தை உணர்த்துகின்ற பட்டினத்தாரு டைய தெளிவும் வேகமும் இவற்றில் சிறிதும் இல்லை. மேலும் சித்தர்ஞானக் கோவையில் மிக்க பிற்காலத்தார் பலர் பாடித் தொகுத்து வைத்த பல பாடல்களும் பனுவல்களும் காணப்படுவது நன்கு அறிந்த செய்தி. இவை போல பட்டினத்தார் ஞானமும் பிற்காலத்தார் பாடல் என்றே கருத வேண்டும். நாம் வாழும் இக்காலத் தில் 'விரைந்து கவி பாடும் வேந்தர்கள் இருப்பது போலவே அக்காலத்திலும் இருந்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவருடைய படைப்புதான் இது என்று முடிவு கட்டுவது தவறுடையதாகாது. இதுகாறும் காட்டியவற்றால் இவண் கூறப்பெறும் செய்திகள் விளக்கமாகும். பட்டினத்தார் என்ற பெய ரில் பலர் இருந்திருக்கக் கூடும். ' உண்மையான பட்டி னத்தாருக்கு விசிறிகள் (Fans) ஆகி அவர்களில் ஒருவர் 1. இக்காலத்தில் பலர் அரசியல் தலைவர்களை விசிறிகளாக் கொண்டு அண்ணாத்துரை, காமராசர், கருணாநிதி என்று பெயர்கள் சூட்டிக் கொளவ தைப் போல் அக்காலத்திலும் புகழ் பெற்றவர்கள் பெயர்களைச் சூட்டிக் கொண்டிருக்கலாம் இக்காரணத்தால் தான் சிவப்பிரகாசர், ஞானப்பிரகசர், மறைஞானசம்பந்தர், சிவவாக்கியர் போன்ற பெயருடையோர் பலர் காணப் பெறுகின்றனர் என்பதை உணர முடிகின்றது.