பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பட்டினத்தார்? # 127 & பாடல் பாடும் ஆற்றல் கைவரப் பெற்றிருந்தமையால் அவர் பல பாடல்களைப் பாடியிருத்தல் கூடும் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஒருவர் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்; பதினோராந் திருமுறையுள் உள்ள ஐந்து பிரபந்தங்களையும் பாடிய வர். இரண்டாமவர் 14-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து பல பாடல்களைப் பாடினார். இவருடைய காலமே சித்தர்கள் பலரும் வாழ்ந்த காலம். சிவவாக்கி யர், ஞானமார்க்கம் பாடிய ஒளவையார், வேறு பல சித்தர்கள் இக்காலத்தில் வாழ்ந்தார்கள் சித்தர் கோவை' என்ற நூலும் இவரை ஒரு சித்தராக வைத்து இவர் பாடல்களையும் சித்தர் பாடல்களோடு சேர்த்துக் கூறும். எனவே, இப்பட்டினத்தார் சித்தர் வரிசைக்குரிய வர் என்ற கருத்தும் பொருள் உடையது. இவ்விரு பட்டினத்தாருக்கும் உரியன அல்லாத வேறு பல பாடல் கள் பிற்காலத்தில் தோன்றி மூன்றாம் பட்டினத்தார் பெயராலேயே வழங்குகின்றன. இங்ங்னம் 'மூன்றாம் பட்டினத்தார்’ என்று ஒருவர் வாழ்ந்ததாகத் தெரிய வில்லை. இந்த மூன்றாம் பட்டினத்தார் ஒரு 'கற்பனைப் பெரியார்’, மக்களால் அல்லது யாரோ ஒருவரால் 'மூன் றாம் பட்டினத்தார் என்று சூட்டப் பெற்ற ஒரு 'கற்ப னைப் பெரியார்', முதல் இரண்டு பட்டினத்தார் போல் பிறந்து வளர்ந்து மக்களோடு உறவாடியவர் அல்லர் இவர். 2. பட்டினத்தாரை அடுதது வாழ்ந்த தாயுமான அடிகள் காலததிலும சித்தர்கள பலர் வாழ்ந்த செய்தி அவருடைய சித்தர்கணம்' என்ற பாடல தொகுப பால் அறியலாகும் விளங்காப் புதிாபோல (My.sterious பாடியவர்கள் யாவருமே சித்தர்களே பாரதியார் கூட நானும் ஒரு சித்தர் என்று சொல்லிக் கொண்டாரலலவா?