உ 85 கிர்களையுடைய அடி. அடி ஈண்டுப்புறவடி. முன்றாள் - முழந்தாள் என்றலுமாம். தன்னரசனாயின் அவற்குத் தலையிலேற ஏற்றங் கொடுக்கும் ; முன்றாள் கொண்டு பிறர் முடியுடைத்தலையைப் புரட் டும் என்பது குறித்தார். அடிய வோங்கெழில் யானை - அடியினை யுடைய ஓங்கிய யானை, எனவும் எழில் யானை எனவுங் கொள்க. இது, பகைப்படை யானையின் முடியுடைக் கருந்தலை புரட்டும் என்ற தனானும் ஓங்கெழில் யானை யென்றதனானும் அறியலாம்.யானை புரவியொடு வயவர் வீழ முனைகெடச்சென்று என்க. யானை யொடும் வடிமணிப் புரவியொடுஞ் சென்று என்றது தேர் புரவி யான் ஈர்க்கப்படுதல் கருதியும் படைஞர் யானையினும் புரவியினு மூர்ந்து சேறல் கருதியும். நல்ல பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்ப - பெரிய விசும்பிற் பருந்துகள் உலாவி நடப்ப என்றது, இவன் யானையும் புரவியுந் திரள் திரளாகச் சேறலின் மண்துகளெழுந்து விசும்பு தூர்த்தலான் ஆண்டுப்பறந்த பருந்துகள் தரையில் உலாவி நடப்பன போலாயின என்பது குறித்ததாம். "பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு முயர்வான் குறித்த துலகு என்றதுங்காண்க. அறியாது கூறினார் கூ (தொல்.புறத்.68.உரை) நடவாது பறப்பவற்றினை உலாய் நடப்ப என என்பது இயையாதென்க. பெருநல்வானம் என்றது, இவன் படையெழுச்சிக்கு முன்னர்ப் பெரிதும் தூய்து மாகிய விசும்பு என்பது தோற்றிநின்றது. வடிமணிப்புரவி - இவன் வரவினை இவன் வருதற்கு முன்னே ஒலியாற்காட்டு மணிகளை யுடைய குதிரைப்படை என்றது மறைந்தடுதலில்லாமை குறித்தது. வயவர் ர்வீழ - இப்படைக்கு வீழ்ந்தார் பலபல போர் வென்றவர் என்பது குறித்தது. தன்னை முன்னே வென்றவர் வீ ழ என்பதும் பொருந்தும். வயம் - வெற்றி. தூறு இவர் துறுகல் -- உழிஞை சூடிய முரசிற்குவமை. இதனைப் "பொலங்குழை யுழிஞையொடு பொலியச்சூட்டிக் குருதிவேட்கை யுருகெழு முரசம்"
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/100
Appearance