உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 வயலும் உள்வாய் நீர்நிலையும் வேறு காணப்படாது நீரறுதலான் எ-று. அப் பொய்கை உள்ளும் புறனும் அறல்பட்ட கொம்பினை யுடைய கலையுடன் மான்பிணைகள் துள்ளி விளையாடவும். இது பகைவர் தண் பணை நாடு கெட்டவாறு கூறினார். இனி அவர் ஊர் கெட்டவாறு கூறுவர். 246 - 50. கொண்டி மகளிர்-கோயிற் பணிபுரியும் பதியிலார். இவர் தாமே தம் போகத்திற்கு ஆடவரை வரிப்பவராதலிற்கொண்டி மகளிர் என்றார். "கொண்டியாயினவாறென்றன் கோதையே " (தேவாரம். 710, 7) என்பதனாலிதன் உண்மையுணர்க. "வண்டிற் றுறக்குங் கொண்டிமகளிர்" (மணிமே.18, 109) என்றார் பிறரும். இவர் முன்னே தோற்றார்பாற் பிடித்துவந்த மகளிரென்பர் உரை காரர். இவர் உண்துறை மூழ்கி என்றார் -ஊரார் நீருண்ணுந் துறையின் மூழ்குதல் தகவன்றேனும் அம்பலப்பணிக்குத் தூயரா தற் சிறப்பால் அது புரிந்தனர் என்பது தோன்றக் கூறினார். அந்தி மாட்டிய நந்தா விளக்கின் - இவர் இருள் வருவதற்கு முன்னே மாலையிலே கொளுத்தின இரவெல்லாம் அவியாத விளக் கினையுடைய, அம்பலம் என்க. மலரணி மெழுக்கம் - இவர் மலரணிந்த மெழுகிய இடத்தையுடைய அம்பலம். அம் மெழுகிய இடத்து ஏறிப் பலர் தொழா நிற்க. பு வம்பலர் சேக்கும் பொதியில் - புதியராய் வந்தார் தங்கும் அம்பலம். பொதியில் கடவுளுடைய தென்பதும் புதியராய் வந் தார் தங்குமிட மென்பதும் இவரே 167 ஆம் அகப்பாட்டில், " எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று போர்மடி நல்லிறைப் பொதியில் சேக்குவங் கொல்லோ" எனக் கூறுதலான் உணரலாம். தொழுதல், தெய்வம் இறை கொள்ளும் கந்துடைமையால் என்றும் வம்பலர் தங்குதல் பொதியி லாதல் கருதியும் என்று விளங்கக் கூறியது காண்க. தொழ வந்தவர் பலர் அவ்வம்பலர்க்கு உணவளித்தல் இயல்பென்க. பொதியிற் பருநிலை நெடுந்தூண் ஒல்கத்தீண்டி- அவ்வம்பலத்திற் பருத்த மேனிலையைத் தாங்கி நின்ற நெடிய தூண் சாயும்படி உரிஞ்சி.