88 25155.பிடியானை யொடு புணந்துறையவும் என்றது பகை வர் நாடும் ஊ ருங் காடாயினவாறு குறித்தார். "பெருங்கையானை வெரிநோங்கு சிறு புற முரிஞ்ச வொல்கி" என இவரே அகப்பாட்டிற் கூறினார். (அகம். 167) பெருநல் யானை - பிடிக்குச் செயற்கரிய செய்யும் நல்லகளிறு. புணர்ந்துறை தல் கூறியதனால் மக்களே யின்மை குறிப்பித்தார். அருங்காடா பின வென்பது குறிப்பு. அருவிலை நறும் பூதூஉய் - அரிய விலைக் குக் கொண்ட மணமலரைத்தூவி. அரிய விலை மணம் பற்றி யென்றறியக் கூறினார். இனி அருவிலை நறும்பூ பொற்பூவுமாகும். ஈண்டு நறும்பூ நல்லபூ என்க. முதுவாய்க் கோடியர் - அறிவு வாய்த்தலையுடைய கூத்தர். முது வாய்- ஆடற் கேற்பப்பாடும் அறிவு டைய வாய் எனினுமமையும். (பொருநாறு.57) "கோடியர் தலைவ கொண்ட தறிந்" திரிபுரி நரம்பு - திரிந்து முறுக்கிய நரம்பு. 'புரிபுனை பூண் கயிறு" (கவித்.80) தீந்தொடை என்று யாழிற்குப் பெயராக்கினார். இனிமையாற் றொடுக்கப்பட்டதொன்றாதல் கருதி. தமிழர் இசை யின் இனித்தற்கு இவ்வினிய பெயரே சான்றாகும்.நாம்பின் மறைய (தொல்.எழுத்.33) என்புழிப்போல நரம்புயாழ் என்று கொண்டு அதன் கண்தீந் தாடை- இனிமையாகத் தொடுத்த இசை யெனினுமமையும். விரல்,வன்மை, மென்மை, சமம் என்னும் மூவகையானுந் தொடுதலால் இனிமை செய்யுங்கருவியாதல் கருதித் தீந்தொடையென்று யா ழிற்குப் பெயராக்கினார் என்பதே சிறந் தாகும். தீந்தொடை யோர்க்குமென்றார் அவ்விசை செவியளவிற் கேட்பதுமட்டில் வேண்டிய தொன்றாதல் கருதி. இதன் கட்ட கோடியர் (கூத்தர்) என்றதனால் நாடகமும், தீந்தொடை யென்றத னால் இசையும், முழவொடு புணர்ந்த என்றதனாற் றாளமும் கூறி, பாவம், ராகம், தாளம் என்ற மூன்றையும் புலப்படுத்தார். இவை கெட்டு முரண் கூறியவழி ஒரி கதிர்ப்பவும் ஆண்டலை விளிப்பவும், பேய்துவன்றவும் எனக்கூறுதலானும் இம் மூன்றுங் கருதுதல் தெளியலாம். முதற்கட் கந்துடைப் பொதியிலிற் பலர் தொழக்கூறி,
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/103
Appearance