101 திற்குவமைகூறு முகத்தாலோ ஒரீஇக் கூறுமுகத்தாலோ ஏற்ற பெற்றி யெடுத்தாள்வதே கவிமரபென்று கொள்க. இவ்வரிய வுண்மையுணரப்படாமையான் இச்சூத்திரத்திற்கு வேறு வேறுரை யெழுந்தன வென்க. துய்க்கும் இன்பத்தையிழந்து துன்பநிறைந்த வெய்யகானம் புகுதலின் வாரேன் என்றான். எ - று. கேட்கப்படும் பேரின்பத்தின் பொருட்டும் விடற்கரிய தண்ணிய தடமென் றொளின்பம் வெய்யகானத் துன்பத்தின் பொருட்டு விடலாகுமோ என்று கருதிக் கூறினானாகக் கொள்க. "தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு" என்பதனானுணர்க. பொருத்தபு புலமை உருத்திரங்கண்ணனா நுண்பொருள் ததும்ப இன்சொற் புணர்த்தி யாற்றொழுக்காக இனிதியாத்த இப்பாட்டை மாட்டேற்றிலக் கணத்தாற் சிதைத் திடர்ப்படுத்தியைத்தலே வேண்டாமை உய்த்துணர்ந்து கொள்க. இனிப் பொருநராற்றுப்படையார், "தேனெய்யொடு கிழங்கிமாறியோர் மீனெய்யொடு நறவு மறுகவும் குறிஞ்சி பரதவர் பாடநெய்த னறும்பூங் கண்ணி குறவர்சூட மனைக்கோழி தினைக்கவர வரைமந்திக் கழிமூழ்க' எனக்குறிஞ்சியும் நெய்தலும் அணுகவைத்துக் கூறினாற்போது கூறாது இவர் இப்பட்டினப்பாலையிற் குறிஞ்சியே யில்லாமற் பாடுதல் நோக்கின் இவர் நாட்டினியல்பை உள்ளபடியே கூறும் இயல்பின ரென்றுணரலாம்.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/116
Appearance