உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 வாதலின் அவற்றை விலக்கற்கினிமை வேண்டினர். "இன்மாவி னிணர்ப் பெண்ணை" எனப் பாடங் கொள்ளலும் ஆகும். இவ்வடி யைக் "கோட்டெங்கிற் குலைவாழை' என்றாற் போலக் கொள்க. இனி உண்ணுநர் திரள்கொள்ளுதற்குக் காரணமான மாமரம் இனமா என்பதும் ஒன்று. "உண்ணுநர்த் தடுத்தன தேமா' (மலைபடு. 138) என்பது மலைப் லைபடுகடாம். ஓரின மென்றாற் புளிப்பானும் ஓரினமாதல் குறிப்பதல்லது இனிமை குறிக்காமை காண்க. ஈண்டு ஏற்பது கொள்க. முதற்சேம்பு- அடிபரந்த சேம்பு என்பர்; முதல்-வேர்; வேரே கிழங்காகவுடையது. வடநூலார். கிழங்கினை மூலம் என்ப தனாதுணர்க "வாடிய வள்ளி முதலரிந் தற்று" (குறள், 1304 என்றார் திருவள்ளுவனாரும். சேம்பு அதன் கிழங்காற் பயன்படு தல் அறிந்தது. தம் சேம்பின் முளைப்புற முதிர்கிழங் கார்குவிர்' (362) என இவ்வாசிரியரே பெரும்பாணாற்றுப் படையிற் கூறுதல் கண்டுகொள்க. சேம்பு முதலுதற்குக் காரணமாதலான் முதல் எனினுமமையும். குலமுதல் குலத்திற்கு மூலம் என்பதனாலறிக. (பறப். வெண். பொதுவியல். 6) முளையிஞ்சி - முளையினாற் பயன்படும் இஞ்சி இணர்ப்பெண்ணை - நுங்குக்கொத்தை யுடைய பனைமாம். புறத்தே கரும்பும் நெல்லும் விளையுங் கழனியும் அதனை யடுத்து இவ்வெண் பொருள்களுமுள்ள துடவையுஞ் சூழ்ந்து, கதிரருந்து மோட்டெருமை முழுக்குழவி கூட்டு நிழற்றுயிலும், அகநகருடைய கும்பல்லூருடைய சோணாடு என்க. அகநகர் -அகமனை. இவ்வாறு