உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலை வசையில்புகழ் வயங்கு வெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினுந் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி 5 வான்பொய்ப்பினுந் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும் விளை வா வியன்கழனிக் கார்க்கரும்பின் கமழாலைத் 10 தீத்தெறுவிற் கவின்வாடி நீர்ச்செறுவி னீணெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கட் காய்ச்செந்நெற் கதிரருந்து மோட்டெருமை முழுக்குழவி 15 கூட்டுநிழற் றுயில்வதியும் கோட்டெங்கிற் குலைவாழைக் காய்க்கமுகிற் கமழ்மஞ்ச ளினமாவி னிணர்ப்பெண்ணை முதற்சேம்பின் முளையிஞ்சி யகனகர் வியன்முற்றத்துச் சுடர்நுதன் மடநோக்கி 20 னேரிழை மகளி ருணங்குணாக் கவ ருங். கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின் அருட்டு 25 முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்.