உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவும், கம்பநாடர், 56 "சாயு வென்பது தாய்முலை யன்னது" (ஆற்றுப். 12) எனவும் கூறுதலானு முண்மையுணர்க. இந்நல்லோர் கருத்திற் கியையக்கொள்ளின் இவ்வுவமைகள் காவிரி கடலொடு கலப்ப தற்குக் கூறியனவாக எண்ணாது, இம் மக்கள் திரள் தீது நீங்கக் கடலாடியதற்கும் மாசு நீங்கக் காவிரிப்புனல் படிந்ததற்கும் உவமை யாக வெழுந்தனவென நினையின் நன்கு பொருந்துதல் கண்டுணர்க கடலாடுதல் "கழிய காவி குற்றங் கடல் வெண்டலைப் புணரி யாடியு நன்றே பிரிவி லாய முரியதொன் றயா" (குறம். 118) கட என்பது முதலியவற்றால் அறியப்படும். தீது நீங்கக் லாடுதல் ஆரியரொப்ப இந்நாட்டார்க்குத் தொன்மை வழக்கென்பது இதனாற்றெரியலாம்; "நீண்டதோள் மால்கிடந்த நீள்கடனீ ராவோன் பூண்டநா ளெல்லாம் பகும் (3-ம் திருவந்தாதி i!) என்பதனையும் ஈண்டைக்கு நினைந்துகொள்க. முந்நீர் விழவு; கொண்டாடியவர் ("முந்நீர் விழவி னெடியோன்"; புறநா. 9) தமிழரே யாதலுந் தெளிந்து கொள்க. மாமலையணைந்த கொண்மூப்போலம் பரதவர் மகளிரொடுகடலாடியும், தாய்முலை தழுவிய சூழவி போல புனல் படிந்தும் என்று ஆசிரியர் கருதினாரெனக்கொள்க. மூப் போலவுங் குழவி போலவும் கடலாடியும் புனல் படிந்தும் என நிரனிரையாய் இயைதல் காண்க. ஆசிரியர், "புணரியொடு யாறு தலைமணக்குங்கூடல்" காண் என்ற தொடரிற்றலைவனோடு தலைவி மணந்து கூடுங்கூட்டத் தைக் குறிப்பானுணர்த்தலும் ஈண்டைக் கேற்ப நோக்குக. மாலையை