157 மேகம் படிந்து மூடுதல் போலக் கடலை மக்கள் படிந்து மூடுதலான் மலையுங் கொண்மூவும் உவமை கூறினார். போலவும் போலவும் என்பன உவமானங்களை யெண்ணியன. ஆடியும் ஆடியும் என்பன உவமேயங்களை யெண்ணியன. தாய்முலையைப் பிரிந்து தழுவாத குழவி அதனைக்கண்டு தழுவியது போலக் காவிரியைப் பிரிந்து கடலிற்படிந்த இம் மக்கட்டொகுதிகள், தம் தாயாகிய பூமிதேவிக்கு முலையாகிய காவிரியை நண்ணி அன்புடன் தழுவியதென்பது கருத இவ்வாறு கூறினாராகக் கொள்க. முலைப்பாலைக் காவிரிப் புனலாகக் குறித்தாரென்று நினைக்க. ஈண்டு நல்லது கொள்க. இால் உரை யாசிரியரே கடலக் கணவனாகக் குறித்திருப்பதுங் காண்க, தீது - பாவம்; மாசு - அழுக்கு. காவிரி சங்கமம் புண்ணிய தீர்த்தமாதல் அருச்சுனன் தீர்த்த யாத்திரையினுங் கண்டது. இதத் த்தொலிகூடல் - ஒதத்தால் ஒலிக்கின்ற சங்கமம். கூடற் பெருந் துறையென்ன வியையும். 101-105. அலவனாட்டியும்-ஞெண்டி னையலைத்தும். உரவுத் திரையுறுக்கியும் வலிய அலையைக் குதித்து காலால் உழக்கியும். பாவை சூழ்ந்தும் - சாய்க்கோரையிற் பாவையை ஆராய்ந்தும். "தெற்றிப் பாவை திணிமணமயருமென்றோன் மகளிர்" என்புழிப் போல மணலில் வகுத்த பாவையுமாம். கூ (புறம்.283) பாவைழவு ஆராய்ந்து வகுத்தலாற் சூழ்தல் கூறினார். பல்பொறி-ஐம்பொறி; ஐம்பொறிகளும் ஒரு சேரமருள் தல் நோக்கு. மருண்டும் - நிலைதடுமாறியும், இன்பமே துய்த்தலால் துறக்க மேய்க்கும் பெருந்துறை என்றார். என் "பெறற்கருந தொல்சீர்த் துறக்க மேய்க்கும் பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை கூ பெரும்பாணாற்றினும் இவரே கூறினார். கடலாடித் நீங்கினார் குழீஇயதனானுங்கூறினார். பாவிகள் பெறுதற்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/72
Appearance