உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கரிய தொல்லைச் சிறப்புடைய துறக்கம் என்க. பெருந்துறைக் கண் என்க. பகல் விளையாடி என்றதனால் இதற்கு முற்பட்டன் பகற் செய்தி எனவும், இனி வருவன இராச் செய்தியெனவும் கொள்ள வைத்தார். இங்ஙனங்கொள்ளாது மேல்வரும் மாடத்தை 106-ஆம் அடிக்கு எடுத்து மாட்டித் துறக்கம் ஏய்க்கும் பாடத்துத் துணைப்புணர்ந்த மடமங்கையர் என்றுரைகாரர் கொண்டார். திமிற் பரதவர் குரூஉச்சுடரெண்ணி விடிவோரை தெரிதற்கே அவை பயன்படுவனவன்றி வேறில்லை என்க. "பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை' என்றது வழிபடுவார்க்குப் பயனாற் பொய்யாத முறைமை யினையுடைமையால் அவரிடும் பூமலிந்த பெருந்துறை எ-று. பெருந்துறைக்கண் புணர்ந்த மங்கையர் பொறி மருண்டு தாம் (106-110) களைந்த பட்டினை உடுப்பது நீக்கி ஆடவர்க்குரிய துகிலினையுடுத்தும் என்க. தமக்கினிதாகியமட்டினை நீக்கி ஆடவர் பருகிச் செருக்குதற்குரிய மதுவைப் பருகி மயங்கியும். மகிழ்ச்சி - கள் மகிழ்ச்சி. மைந்தர் கண்ணி மகளிர் சூடவு மென்றதனால் இவ்வாறு கூறுதலே ஆசிரியர் கருத்தென்க.கண்ணி யென்றதற்கேற்பச் சூடவும் என்றார். மகளிர் கோதை மைந்தர் மலையவும் என்றதூஉம் இக்கருத்தே வலியுறுத்தும். உவவுமடிந்து (111-114) பனிக்கடல் வேட்டஞ்செல்லாது என்று மேற் சொல்லியவர் ஈண்டுக் கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணு தல் கூறினார். உளவுக்கடல் என அஞ்சாமற் கரையிற்றெய்வம் பேணியதுணிவால் அவ்விரவினுந் திமிலேறி வேட்டஞ் சென்றார் சிலருண்டென்பது தெரிய; "பெருந்திரை முழக்கமொ டியக்கவந் திருந்த கொண்ட விரவி னிருங்கடன் மடுத்த கொழுமீன் கொள்பவ ரிருணீங் கொண்சுடர்" (அகம்.100) ன் எஎன அகப்பாட்டினுள் வருதலானுணர்க. இதனா கொடுமை கொடுத்துக் கொடுந்திமிற் பரதவர் என்றார், என்பதும் ஒன்று.