உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. "கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென' (அகம்.70) என்புழியுங் காண்க. திமில்- மீன்பிடி படவு. கொடும் பரதவர்- இவர் சுடரெண்ணுதல், தாம்புகுதற்குரிய திசையிஃதெனத் தெரிந்தெண்ணுதலுமாம். கரைக்கணுள்ளார் "பாடலோர்த்தும்'; பாடல் நுணுக்கம் அறிந்தின்புற வேண்டுதலின் "ஓர்த்தும்" என் றார்; நயப்பிற்குக் காரணமான பல்வகைச் சுவையும் நாடகம் உடையதென்று கருதி. பாடலை முற்கூறினார், விளியாதான் கூத்தாட்டுக் காண்டல் விலக்கப்படுதல் நோக்கி. மக்களாக்கியன இவையன்றித் தெய்வந்தந்த பேறாகிய வெள்ளிய நிலாவின் இன்பப் பயனையுண்டும் என்க. துய்த்தும் என்பதனால் இயற்கையழகு வாரியுண்ணத்தக்கதென்று தெரியக் கூறினார். கரும் பெருங்கட லும் பெருமணலுலகும் இவையிரண்டையும் தன் குளிர்ந்த அமிர்த கிரணங்களாற்றூய்தாக்க, இருளில் அவ்விருள் கெடத்தோன்றிய திங்களஞ் செல்வன் எல்லாவற்றையும் வெள்ளையாகச் செய்தலான் வெண்ணிலவென்றார். 115120. இது முதற் பட்டினப்பாக்கங் கூறுகின்றார். எ-று. கண் அடைஇய கடைக்கங்குல் -கண்ணடைத்த கங்குற் கடையாமம். அளபெடையாதலின் வலி மிகாதாயிற்று. தாம் இவ்வின்பங்களாற்றுயிலுதற்கு மனமில்லையாகவும் கண் சோர் வினாலடைத்தல் குறித்தார். மா அக்காவிரி - பெருங் காவிரி; மகத்தான காவிரியுமாம். தூஉவெக்கர் என்னும் எதுகைக்கியைய மாஅகாவிரி என வந்தது. மணங்கூட்டுந் தூஉவெக்கர்- கமழ் மணம் பலவுங்கூட்டி நாறுந் தூய எக்கர் என்க. இவை மணற் குன்றுகள். 'மணங்கமழ் மறுகின் மணற்பெருங் மூன்றே எனப் புகார்க்கட் கூறப்படுதல் காண்க. (b. 181) துயின் மடிதல் - துயிலால் வினையின்றிவதிதல். இறையம் பொருள் காக்குந் தொழில் மாக்கள் இரவெல்லாம் விழித்தலாற் கடைக் கங்குலிற் கண்ணடைக்கப்பட்டுத் தூவெக்கரிற்றுயின்