பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிசெய்தது என்ற நூலாசிரியர் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. பட்டி மன்றம், கவிதைப் பட்டி மன்றம் எழுத்துப் பட்டி மன்றம் என்று வளர்ந்த வரலாறும் நூலில் இடம் பெற்றுள்ளது . தமிழ் நாட்டின் வரலாற்றில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இடம் பெற்றவர் நூலாசிரியர் கவிஞர்கோ இளஞ்சேரனார். அதனால் இந்த நூல் பட்டி மன்ற வரலாறாக மட்டும் இல்லாமல் தமிழக வரலாறாகவும் விளங்கு கிறது. பட்டி மன்றத்தில் கலந்து கொண்ட கலந்து கொள்ளக் கூடிய அறிஞர்களையும் தக்கவாறு அறிமுகப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் தமிழகப் பட்டி மன்றங்களில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் மகளிர் பலரையும் நூலாசிரியர் பட்டியலிட்டு அறிமுகப்படுத்தியுள்ளார்.

கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் அவர்கள் எழுதியுள்ள பட்டி மண்டப வரலாறு கி மு 1500 முதல் இன்றுவரை என்ற இந்த நூால் கருத்துக் களஞ்சியம் தமிழ் நாட்டு வரலாற்றில் கருத்து வளர்ச்சியில் நடந்த முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன . நூலாசிரியர் கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் நல்ல கவிஞர் சொற்பொழிவாளர்; சொற் போராளர் ‘திறனாய்வாளர்; படைப்பாளர்; தனித் தமிழ் ஆர்வலர் தமிழ் இனப்பற்றாளர்; எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு தமிழியக்கம் அதனால் நூல் மிகவும் பயனுடைய வகையில் அமைந் திருக்கிறது பட்டி மண்டப விளைச்சல் என்று நூலாசிரியர் குறிப்பிடுவதைப்போல இந்நூலின் விளைச்சல் நன்றாக அமையும் .

இன்றும் இனியும் நடைபெறவிருக்கும் பட்டி மன்றங்களில் நூலாசிரியரின் விருப்பத்திற்கு ஏற்ப, பெருந்தன்மையும் கருத்துச் செறிவும் இருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு மிகுதியும் இருக்கிறது.

மூளைப் புயலுக்குக் கருவியாக அமைய வேண்டிய பட்டி மன்றங்கள் வேடிக்கை , பொழுது போக்குப் பட்டி மன்றங்களாக எங்கோ திசைமாறிப் போவதைத் தடுத்துத் திரும்பவும் பழைய மரபு வழிப் பட்டி மன்றங்கள்பால் இந்த நூல் அழைத்துச் செல்லும் இது உறுதி

ix