பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் [...] 95

உயர்த்துதல் பெண்மையை இழப்பதாகும் என்று தயங்கி னார். தயக்கமே தோல்வியாயிற்று.

சிவன் கூத்தால் வென்றார்.

இது பட்டி மண்டப வாதில் ஒரு கூத்துப் பங்கு.

சமய வாத நெறிகள்

அறைகூவல் கொடி நடல்

சங்கப் பாங்கில் அறைகூவலின் அறிகுறியாகக் கொடி நடப்பட்டது . அப்பழக்கம் சமயப்பங்கில் அருகியது. அத்தினபுரத்துச் சாங்கியவாதியாகிய பூரணன்

“ஓங்க ஒரு கொடி நட்டு உரைக்கிற்பவன் ஆங்கண் எவர்க்கும் அளவு என்று” இருந்தான்.

‘எல்லோர்க்கும் அறைகூவலாகச் சொல்’ என்று கொடி நட்டான். சிலவே இவ்வாறு அமைந்தன.

ஆனால் வெற்றிபெற்றுப் பிடித்த கொடிகள் பல . ஞானசம்பந்தரையும் “நெடுங்கொடி முழங்க நாட்டிய” நீலகேசியையும் கண்டோம்.

“மதுரகவிராசன் நாளென்று வெண்குடை விருது கொடி தாள மேள தண்டிகை

வரிசையொ டுவரவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ'