பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 [ ] பட்டி மண்டப வரலாறு

என்று அருணகிரி வெற்றிக் கொடிபிடித்ததைப் பாடினார். சூதாட்ட அறைகூவலாகக் கொடி பிடித்ததைக் கண்டோம். பலவகைக்கும் கொடி ஏற்றுவதைக் கொடிப் பாட்டு என்று உமாபதிதேவர் பாடினார்.

“கூழைத்தண் தமிழுக்கேன் கொடியும் காளமுமே” என்று ஒட்டக்கூத்தர்பாடினார்.

இருப்பினும் பையப்பைய இக்கொடி பிடித்தல் குறைந்தது.

நாவல் கொம்பு நடல்

நீலகேசிக் காப்பியம் குண்டலகேசியின் அறைகூவ லில் ஒரு புதுச்செய்தி தந்தது.

“காவலன் கடைமுகத்தோர் தண்தழைய பொழில் நாவல் சாகை (கொம்பு, கிளை) நட்டு உரைபெறாக் குண்டலகேசி”

என்று நாவல் மரக்கொம்பைத் தழையுடன் நட்டதைக் காண்கிறோம். நீலகேசியும் இம்முறை கொண்டாள்.

நாவல் மரக்கொம்பு ஏன் அறைகூவலுக்குக் கொள்ளப்பட்டது?