பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு 113


என்று நம் காலத்துச் சான்றோர் கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார் பாடினார். பைய நாவை அசைத்து வாயால் பேசச் செய்தமைதான் மாந்தனை மற்ற உயிர்களிலிருந்து உயர்த்தியது . வாய்ப்பேச்சால்தான் மாந்தன் ஆனான்.

வாயில்லா .....

உயிரினங்கள் அனைத்தும் வாய் உள்ளவை (ஓரறி உயிர் தவிர) உடலுக்கு அமைந்த வாய் என்னும் அளவில் நோக்கினால் மாந்தன் வாயைவிட ஊர்வன, பறவை, விலங்கு முதலிய உயிரினங்கள் பெரிய அளவான வாய்களையே பெற்றுள்ளன. ஆயினும், அவை வாயில்லா உயிரினம் (பிராணி) எனப்படுகின்றன. ஏன் அவ்வாறு கூறுகின்றோம்? வாய் செய்யும் செயல்கள் இரண்டு. ஒன்று உள்ளே வாங்கும் செயல், அஃது உணவைக்கொள்ளல். மற்றொன்றுவெளியே விடுதல், அஃது ஒலித்தல் உணவுகொள்ளுதலின் நோக்கம் உடலைப் பேணுதல், ஒலித்தலின் நோக்கம் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்தல் இவ்விரண்டையும் மாந்தரை அல்லாப் பிற உயிரினங்களும் செய்கின்றன . உயிர்கள் அனைத்திற்கும் உணர்வுகள் உள்ளன . விலங்கினங்களும் பறவைகளும் ஊர்வனவும் தத்தம் உணர்வுகளை ஒலித்து வெளிப்படுத்துகின்றன.