பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 | பட்டி மண்டப வரலா..!!

பேகன் மனைவி கண்ணகியும் கணவன் கைவிட்டமையால் கண்ணிர் விட்டு அடங்கிக் கிடந்ததையே காண்கிறோம். ஆனால், சிலம்புக் கண்ணகி கோவலன் தொடர்பால் அடங்கிக் கிடந்தாலும், தன் கணவனுக்குப் பழிநேர்ந்ததைத் தாங்காது கிளர்ந்தெழுந்தாள் இல்லத்தைவிட்டுத் தாண்ட்ாத அவள் மண்மகள் அறியாதவண்ணச் சீரடியை - உடைய அவள் அரசவையில் வீறுற்று நின்றாள் எத் துணைக்கெத்துணை அடங்கி இருந்தாளோ அத்துணைக்கத் துணை புரட்சியோடு எழுந்தாள் ஆரியப்படை கடந்த பெருமன்னன் நெடுஞ்செழியனுடன் வாதாடினாள் வென்றாள். சிறு சிறு சொற்களாகப் பேச்சுப் பழக வைத்தே இளங்கோவடிகள் சிலம்பில் கண்ணகியைக் காட்டினார். அவரே, அக்கண்ணகியை வெடிப்பேச்சில் நிறுத்திப் பேச வைத்தார் பழிவாங்கும் போக்கில் என் பட்டிமையம் காண்ருறுவாய்” என்று சொல்ல வைத்தார்.

இவ்வாறான கண்ணகியின் பேச்சால் மன்னனும் கோப்பெருந்தேவியும் மடிந்தனர் . மதுரை திக்கிரையா யிற்று அடங்கிக்கிடந்த கண்ணகியின் பட்டிமை அழி, வைத் தந்தது அழிவானாலும் நெறியான அழிவு, நேர்மைக்காக அழிவு.

பெண்களை அடங்கிக் கிடப்பவர்களாகவே கண்டு வந்த ஆடவர் அவர் கிளர்ந்தெழுந்தால், புரட்சி கொண் டால் அது தகாதது என்று கருதினர் . இது ஆடவரின் தன்மூப்புக் குணம்.