பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 T பட்டி மண்டப வரலாறு

குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்

பட்டிப் பசுவேபனவற்கு வாய்த்ததே” என உருவகித்துப் பட்டிப் பசுக்களாகப் பாடினார் . சைவசமயத்தில் ஏணிப்படிகள் (சோபானங்கள்)” அவற் றைப் பட்டிப் பசுக்கள் என்றார் . ஏன் பட்டி என்றார்? அவரே இங்கே குறித்த ஐந்து பசுக்களை விளக்கியவர் மற்றொரு பாடலில்,

“பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துள

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன” என்று காவலில்லாது திரிவதைக் குறித்தார். எனவே பட்டி என்றார் -

ஆன்ம நெறியாக விதிக்கப்பட்டவற்றினின்று அகந்தையால் திரியும் கோட்பாடுகள் பட்டி ஆயின.

மேலே காட்டிய பாடலும், அடிகளும் திருமந்திரத்தில்

‘சூன்யசம்பாசனை’ - மறைபொருளாகக் கூறல்’ எனும் தலைப்பில் உள்ளவை. எனவே இவ்வகையிலும் கூறலாம். எவ்வாறாயினும் பட்டி பட்டியே.

பட்டிக் கடா

பட்டிப் பசு போல் அருணகிரிநாதர்

பட்டிக்கடாவில் வரும் அந்தக் கரவுள்ளம் roof என்று வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடியதில் பட்டிக் கடா’

வருகிறது.