பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு T j43

இக்காலத்திலும் காவலில்லாது திரியும் மாடு பட்டி மாடு என்றுகூறப்படுகிறது. அது திருமூலர்பாடியதுபோல் மேய்ப்பார் இன்றித் திரிவது அடங்காமல் சிறுகுறும்பு செய்தவன் பட்டி எனப்பட்டதுபோன்று இது அமைந்தது.

காலப்போக்கில் பட்டி எனும் சொல் இவ்வாறான

பெருமதிப்பில்லாத பொருளைக் கொண்டது.

தொன்மைக் காலத்தில் இச்சொல் பாடல் பயில் இடத்திற்கு அடைமொழியாகவும், அறிவுத் திறத்தால் கருத்துப்போரிடும் நிகழ்ச்சிக்கு உரியதாகவும், நல்ல பயனுள்ள முடிவுகளைக் கொள்ளும் செயற்பாட்டிற்கு உரியதாகவும் இருந்தது. w

இவற்றை முன்னர் விரிவாகக் கண்டுள்ளோம். அத்தகு பெருந்தகவுச்சொல் குறைதகவுச்சொல்லாக மாறியமைக்குக் காரணம் பட்டி மண்டபம் ‘வாதக் களமாக மாற்றப்

பட்டமையாகும்.