பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு #49

இவ்வாறெல்லாம் பொருள்கள் விரியினும் படு, அதன் முதற்பொருளில் வளர்ந்த பட்டி என்பது விளை யாட்டாகக் குறும்பு செய்யும் பொருளையும் வினையாகச் சொல்லாடும் பொருளையும் தந்து நிற்கின்றது . இப் பொருள்கள் பட்டி என்னும் சொல்லுக்கு எவ்வாறு பொருந்தின; இதற்கு விடைகாண படு’ என்னும் முத னிலைக்கு அடித்தளமான வேர்ச்சொல்லைக் காண வேண்டும்.

படுவின் வேர்

‘படு’ என்பதற்கு வேர்ச்சொல் பள்’ என்பது இது பன்’ பண் ஆகும். ளகரம் னகரமாகத் திரியும் புணர்ச்சி

யிலும் இதனைக் காணலாம்.

உள் - உணன் - உண்மை

ஒள் - ஒண் - ஒண்மை

வெள் - வெண் - வெண்மை

கொள் - கொண்டான் என்பன போன்று,

பள் பண் பண்ணை ஆயிற்று இஃது ஒரு வழி வளர்ச்சி ஒரு வேர்ச்சொல்லிலிருந்து பல வழிச்சொற்கள் தோன்றும்