பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#48 | பட்டி மண்டப வரலாறு

என்று பாடினார் கண்டபடி பாய்ந்து சிலநேரம் வஞ்சம் செய்யும் ஐந்து பொறிகளை இவ்வாறு தாழ்த்திப் பாடினார்.

இப்பொருளில் பட்டி மண்டபத்தை நோக்கினால் அது பின்னர் எழுந்த சமய காலப் பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்குப் பொருந்துகின்றது.

நிகண்டுகள் படு’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு நீர்நிலை என்னும் பொருளையும் அறிவித்தன.

இதற்கு இலக்கியமாக முன்கூட்டியே சிறுபாணாற் றுப்படை ஒர் அடியை அமைத்துள்ளது.

பனிநீர்ப்படுவில் பட்டினம் படரினும்”

எனும் அடி அது இங்கு படு நீர்நிலையாகிய குளத்தைக் குறித்ததாகும். இதற்கு உரை விளக்கிய ந்ச்சினார்க்கினியர்,

“குளிர்ச்சியையுடைய, நீரையுடைய குளத்தை உடையதாகிய”

என்று குளமாகக் காட்டினார் தொடர்ந்து படு - “மடுவும் ஆகும்” என்றும் குறித்தார்.

இவ்வாறாகப் படு என்பது மேற்கண்ட பொருள் களைத் தருகிறது . இப்பொருள்களும் படு + இ - பட்டி ஆகும்போது சங்கப் பாங்கையும், சமயப் பங்கையும்

காட்டுகின்றது.