பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 H பட்டி மண்டப வரலாறு

நிறைவுகொள்ள ஓர் இலக்கிய ஆட்சி துணைக்கு நிற்கின்றது. அஃது பண்ணை நீர்ப்பண்ணை தொடர்பில் உள்ளது. முன்னர் கண்ட எயிற்பட்டினம் என்னும் நகரை வண்ணிக்கும் சிறுபாணாற்றுப்படை

“பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரினும்”

என்று பாடியது . இதில் படு குளத்தை நீர்நிலையைக் குறிப்பது என்று கண்டோம் . இதனை நச்சினார்க்கினியர் தந்த உரையாலும் அறிந்தோம். எனவே படு முதனிலையில் தோன்றிய பட்டியும் படுவை உடையது அஃதாவது ‘நீர்நிலையை உடையது’ என்னும் பொருள்தரும் பட்டி ஆயிற்று. -

இவற்றால் விளையாட்டு என்னும் பொருள் இயை பின் பட்டியும் பண்ணையும் இணையாகின்றன. கலித் தொகைக் குமரியின் பேச்சில் வந்தவன் விளையாட்டாக அதிலும் குறும்பு விளையாட்டாக மணல்வீட்டைச் சிதைத்தான் கூந்தலைப் பிடித்து இழுத்தான். பந்தை எடுத்துக்கொண்டு ஓடினான் . இவ்வகையிலும் பட்டி ஒரு விளையாட்டு இது விளையாட்டான பட்டி இவ்வாறு பொருள் இயைபில் பட்டியையும் பண்ணையையும் பொருத்தியது. இரண்டும் பள் பண் என்னும் மூலத்தில் பிறந்து பொருளிலும் ஒன்றி நின்றன என்று காட்டுதற்கே இதுபோன்று வினையான பட்டிதான் சொற்போர்ப்

பட்டிமண்டப நிகழ்ச்சி. விளையாட்டு குறும்புப்போர்