பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு - 159

பட்டிகை

பட்டிகை என்றொரு சொல் எழுந்தது . சுந்தரரின் திருமணத்தைத் தடுக்க வஞ்சமாக அந்தணன் உருவில் வந்த சிவபெருமான் கொண்டு வந்த ஒலையைச் சேக்கிழார் பட்டிகை என்னும் சொல்லால் குறித்தார் . இதிலும் பட்டிப்பொருள் உள்ளது கொங்குவேளிர் இதனை ‘அரசுமுறை என்னும் பொருளில் பாடினார் . இடுப்பில் கட்டிய ஆடையின் கட்டு நெகிழ்ந்து சரியாதிருக்கச் சுற்றிக் கட்டி அணியும் அணி பட்டிகை எனப்படும்.

பட்டினம்

பட்டினம் என்னும் சொல்லும் பட்டியுடன் தொடர் புடையது . பட்டியின் முதல்நிலையாகிய படு நீர்நிலை என்னும் பொருள் கொண்டதைக் கண்டோம். அந்தப் படு’, இனம் என்னும் சொல்லுடன் இணைந்து பட்டினம்’ ஆயிற்று ஆகி நீர்நிலையாம் கடலின் கரையில் உள்ள நகரைக் குறிக்கலாயிற்று.

பட்டி நியமம்

பெருங்கதை பட்டி அரங்கு நிகழும் இடத்தைப் பட்டி

நியமம்’ என்னும் சொல்லால்,

பட்டிநியமம் பதிமுறை நிறீஇ'